Wednesday, April 28, 2010

மனிதாபிமானம் தொலைந்துவிடவில்லை.......


இரண்டு கண் பார்வையற்றவர்கள் தண்ணீர் குடிக்க சென்றபோது அவர்களால் குழாயை திறக்க முடியாத நிலையில் அதை பார்த்துக்கொண்டிருந்த ஒரு தாய் குரங்கு அவர்கள் தண்ணீர் குடிக்க குழாயை திறந்து உதவி செய்தது. பின்னர் அதுவும் அருந்திவிட்டு குழாயை மூடிவிட்டு சென்றது. இந்த அதிசயம் நடந்த இடம் கர்நாடக மாநிலம் பெங்களுரில் உள்ள ராகிகுட்டா கோவிலில்.


இதிலிருந்து நாம் ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளவேண்டும். இந்த பூமியில் பிறந்த அனைத்து உயிரனங்களிடத்திலும் மனிதாபிமானம் என்பது இன்னமும் இருக்கின்றது.  மேலெ உள்ள இந்த காட்சி மனிதாபிமானம் தொலைந்துவிடவில்லை என்பதை நிருபிக்கின்றது, இருந்தும் மனித்ர்களாகிய நாம் தான் பல நேரங்களில் சுயநலத்திற்காக அதை மறந்துவிடுகின்றோம்.

நன்றி!!!

மீண்டும் ஒரு சுவாரசியமான இடுகையுடன்  உங்களை சந்திக்கின்றேன்.

Monday, April 26, 2010

இயற்கை என்னும் நதியினிலே.........

இந்த இடுகையில் எனக்கு மிகவும் பிடித்த சில இயற்கை காட்சிகளையும், நிகழ்வுகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
இதோ அந்த அரிய காட்சிகளை உங்கள் கண்களுக்கு விருந்தாக்குகின்றேன். நீங்களும் கண்டு இந்த கோடையின் வெப்பத்தை தணித்து கொள்ளுங்கள்.


 

நிச்சயமாக அனைத்து படங்களும் உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நினைக்கின்றேன்.
நன்றி மீண்டும் சந்திப்போம்!!!!!!!!!

Monday, April 5, 2010

வெனிஸ் - தண்ணீரில் மிதக்கும் நகரம்......

வெனிஸ் (அல்லது வெனிசு, இத்தாலிய மொழி: Venezia) இத்தாலி நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஒரு நகரம். இது ஒரு புகழ்பெற்ற சுற்றுலாப் பகுதியும் கூட. வெனிசு நகரே வெனிட்டோ பகுதியின் தலைநகரம். வெனிசு மொத்தம் 117 தீவுகளைக் கொண்டது. இவற்றின் ஊடே 150 வாய்க்கால்களும் ஓடுகின்றன. நிறைய சிறு பாலங்கள் இக்கால்வாய்களைக் கடக்க உதவுகின்றன. மேலும் கொண்டோலா எனப்படும் படகுகளும் போக்குவரத்திற்குப் பயன்படுகின்றன.

நகரத்தின் சில எழில்மிகு  காட்சிகள் உங்களுக்காக இங்கே..........  



























வேறு சில சுவாரசியமான தொகுப்புகளுடன்
மீண்டும் சந்திப்போம் நன்றி!!!!
www.speedbloggertemplate.co.cc