Monday, March 29, 2010

குப்பை தொட்டி.....


சாலையோர சிறுசேமிப்பு பெட்டகம்

பாரம் சுமக்கும் சுமைதாங்கி

தொற்றுநோய் தடுப்பு ஊசி

தன்னலமற்ற பொதுநல ஊழியன்

சுற்றுபுற சுகாதாரத்தை சீரமைக்கும் மந்திரி

சில சமயங்களில் எல்லா ஜீவராசிகளுக்கும்
அடைக்கலம் கொடுப்பதனால் நீ ஒரு வாடகைத்தாய்

மொத்தத்தில் எல்லா துன்பங்களையும்
தனக்குள்ளே போட்டு புதைத்துக் கொண்டு
இன்பம் எனும் தென்றலை மட்டும்
வீசுகின்ற  ஒரு   அட்சய பாத்திரம்!!!!!!!

Thursday, March 25, 2010

ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் அரிய புகைப்படங்கள் (மார்ச் 14, 1879 - ஏப்ரல் 18, 1955)

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (மார்ச் 14, 1879 - ஏப்ரல் 18, 1955) குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார். இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டைமுன்வைத்ததுடன், குவாண்டம் பொறிமுறை, புள்ளியியற் பொறிமுறை (statistical mechanics) மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் (Theoretical physics) அவர் செய்த சேவைக்காகவும், 1921ல் இவருக்குப் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.


ஐன்ஸ்டைனின் தந்தை

ஐன்ஸ்டைனின் தாயார்
                                                

ஐன்ஸ்டைனின் வீடு 

ஐன்ஸ்டைனின் சிறு வயது புகைப்படம்

 ஐன்ஸ்டைனின் தனது அலுவலகத்தில்

                                                          

ஐன்ஸ்டைன் அரசியல் பிரமுகர்களுடன் - பெர்லின்

சால்வே காங்கிரஸ் 1927


ஐன்ஸ்டைனின் தொடர்பியல் கொள்கை, E = MC^2


ஐன்ஸ்டைன் தனது பெர்லின் வீட்டில் 1919.

ஐன்ஸ்டைனின் நியு ஜெர்சி வீட்டில்

அறிவியல் மேதையின் கையெழுத்து 




Sunday, March 21, 2010

ரஷ்யாவின் அணுசக்தி நீர் மூழ்கி கப்பல்

ரஷ்யாவின் அணுசக்தி நீர் மூழ்கி கப்பலை 10 ஆண்டுகால குத்தகைக்கு இந்திய கடற்படை வாங்குகிறது. ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் கடந்த வாரம் டில்லி வந்தார். அப்போது, 'நெர்பா' நீர் மூழ்கி கப்பலை 10 ஆண்டு கால குத்தகைக்கு எடுப்பது தொடர் பான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் படி, இந்த கப்பலை இயக்குவது தொடர்பான பயிற் சிக்காக 50 பேர் கொண்ட கடற்படை குழு ரஷ்யாவுக்கு செல்கிறது.


இந்த பயிற்சியை முடித்த பின், கே.152 'நெர்பா' அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த நீர்மூழ்கியை குத்தகைக்கு எடுப்பது, இந்திய கடற்படை பலத்தை காட்டுவதற்காக மட்டுமல்ல, அதிநவீன வசதிகள் கொண்ட நீர்மூழ்கி கப்பல்களை கையாள்வது குறித்த இந்திய கடற்படையினருக்கு, இந்த கப்பலை வைத்து பயிற்சி அளிக்கப்படுவது தான் இதன் நோக்கம். கடந்த 2004ம் ஆண்டு 'நெர்பா' நீர்மூழ்கி கப்பலை உருவாக்க இந்தியாவின் சார்பில் பலகோடி ரூபாய் நிதி அளிக்கப் பட் டுள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு. முதல் இதை இந்தியா குத்தகைக்கு எடுப்பதாக இருந்து. ஆனால், இந்த நீர்மூழ்கி கப்பலில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் 20 பேர் பலியாயினர். இதனால், இந்தியாவிடம் ஒப்படைக்க தாமதம் ஆகிறது. இப் போது, இந்த பழுது முழுமையாக சரி செய்யப்பட்டு மீண்டும் நல்ல முறையில் கப்பல் இயங்குகிறது. இதற்கு முன்னர் சார்லி என்ற நீர்மூழ்கி கப்பலை இந்தியா, குத்தகைக்கு எடுத்து பயன்படுத்தியது. தற்போது பெறப்பட உள்ள நெர்பா நீர்மூழ்கி கப்பலின் எடை 12 ஆயிரம் டன். விமானம் தாங்கி நீர்மூழ்கி கப்பலான இதிலிருந்து ஏவுகணைகளை கடல் அடியிலிருந்து செலுத்த முடியும். இது போன்ற தொழில் நுட்ப பயிற்சிகள் நெர்பா மூலம் பெறப்பட உள்ளன.

தினமலர்
www.speedbloggertemplate.co.cc