Sunday, March 21, 2010

ரஷ்யாவின் அணுசக்தி நீர் மூழ்கி கப்பல்

ரஷ்யாவின் அணுசக்தி நீர் மூழ்கி கப்பலை 10 ஆண்டுகால குத்தகைக்கு இந்திய கடற்படை வாங்குகிறது. ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் கடந்த வாரம் டில்லி வந்தார். அப்போது, 'நெர்பா' நீர் மூழ்கி கப்பலை 10 ஆண்டு கால குத்தகைக்கு எடுப்பது தொடர் பான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் படி, இந்த கப்பலை இயக்குவது தொடர்பான பயிற் சிக்காக 50 பேர் கொண்ட கடற்படை குழு ரஷ்யாவுக்கு செல்கிறது.


இந்த பயிற்சியை முடித்த பின், கே.152 'நெர்பா' அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த நீர்மூழ்கியை குத்தகைக்கு எடுப்பது, இந்திய கடற்படை பலத்தை காட்டுவதற்காக மட்டுமல்ல, அதிநவீன வசதிகள் கொண்ட நீர்மூழ்கி கப்பல்களை கையாள்வது குறித்த இந்திய கடற்படையினருக்கு, இந்த கப்பலை வைத்து பயிற்சி அளிக்கப்படுவது தான் இதன் நோக்கம். கடந்த 2004ம் ஆண்டு 'நெர்பா' நீர்மூழ்கி கப்பலை உருவாக்க இந்தியாவின் சார்பில் பலகோடி ரூபாய் நிதி அளிக்கப் பட் டுள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு. முதல் இதை இந்தியா குத்தகைக்கு எடுப்பதாக இருந்து. ஆனால், இந்த நீர்மூழ்கி கப்பலில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் 20 பேர் பலியாயினர். இதனால், இந்தியாவிடம் ஒப்படைக்க தாமதம் ஆகிறது. இப் போது, இந்த பழுது முழுமையாக சரி செய்யப்பட்டு மீண்டும் நல்ல முறையில் கப்பல் இயங்குகிறது. இதற்கு முன்னர் சார்லி என்ற நீர்மூழ்கி கப்பலை இந்தியா, குத்தகைக்கு எடுத்து பயன்படுத்தியது. தற்போது பெறப்பட உள்ள நெர்பா நீர்மூழ்கி கப்பலின் எடை 12 ஆயிரம் டன். விமானம் தாங்கி நீர்மூழ்கி கப்பலான இதிலிருந்து ஏவுகணைகளை கடல் அடியிலிருந்து செலுத்த முடியும். இது போன்ற தொழில் நுட்ப பயிற்சிகள் நெர்பா மூலம் பெறப்பட உள்ளன.

தினமலர்
www.speedbloggertemplate.co.cc